திமுக waste ! புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்! – விஜயின் தாக்கமான பேச்சு - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியானதையடுத்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இதே தடை அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் தொடர்ந்தது.

இருப்பினும், கடும் நிபந்தனைகளுடன், உப்பளம் மைதானத்தில் வாகன மேடையிலிருந்து 5 ஆயிரம் பேருக்கே அனுமதி அளிக்கப்பட்டது.அதன்படி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் முன் உரக்கக் கொண்டுவந்த கருத்துகள் மாநகரையே பரபரப்பாக்கின.

தமிழ்நாடு – புதுச்சேரி வேறு இல்லை… எங்கள் பாசம் ஒரே இரத்தம்!” – விஜய் உணர்ச்சி பூர்வம் உரையைத் தொடங்கிய அவர்,“என் நெஞ்சில் குடியேறிய புதுச்சேரி மக்களே! நாமொரு குடும்பம்… பிரதேசம் மட்டும் வேறு, மனசு ஒன்றுதான்” என்று உணர்ச்சிகரமாக சொன்னார்.பாரதியார், பாரதிதாசன் வாழ்ந்த மண்ணுக்கு மரியாதை செலுத்திய விஜய், 1977-ல் தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் வந்த அதே உற்சாகம், 1974ல் புதுச்சேரியிலும் ஒளித்தெழுந்தது என்று நினைவுபடுத்தினார்.“புதுச்சேரிக்கும் குரல் கொடுக்கிறேன்!” – அரசுகளுக்கு கேள்விகள் மழை
விஜய் தனது பேச்சை தீவிரமாக தொடர்ந்தார்:
“தமிழகம் போலல்ல; புதுச்சேரி அரசு நல்ல பாதுகாப்பு அளித்துள்ளது.அதை தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்!”.“மூடிய மில்கள் திறக்கப்படவில்லை… இளைஞர் வேலைவாய்ப்பு ஒரு கனவே!.“புதுச்சேரி–கடலூர் ரெயில் திட்டம் இன்னும் கனவாகப் பறக்கிறது!.“காரைக்கால் மீனவர்கள் இன்னும் இலங்கை கடற்படையின் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்!.

“ரேசன் கடைகள் இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரிதான்… இது மாற்றப்பட வேண்டியது அவசியம்!”மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரி சேர்க்கப்படாமையினால், மாநில நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கடுமையாக சாடினார்.“தி.மு.க.வை நம்பாதீர்கள்… நம்ப வைத்து ஏமாற்றுவார்கள்!” – அரசியல் கூர்மையான விமர்சனம்
விஜய், புதுச்சேரி மக்களை நோக்கி,“பொதுமக்களை நம்பிக்கையுடன் ஏமாற்றுவதே திமுகவின் வழக்கம். இனி அந்த வலையில் அகப்படாதீர்கள்!” என நேரடியாக எச்சரித்தார்.“புதுச்சேரியில் விஜய்யின் கொடி பறக்கும்!” – தேர்தல் அறிவிப்பு போல உற்சாகம்
உரையின் இறுதியில் அவர்,“புதுச்சேரி தேர்தலில் தமிழக வெற்றிக்கழக கொடி நிச்சயமாக பறக்கும்… மக்கள் நம்பிக்கை எனக்கு ஆயுதம். வெற்றி உறுதி!”
என்று தன்னம்பிக்கையுடன் அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK waste Puducherry wants statehood Vijays impactful speech


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->