சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக...மாற்றுக் கட்சியினர் இணைப்பு !
DMK preparing for the assembly elections alliance with splinter party members
மணவெளி தொகுதியில் 300க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் திமுக மாநில அமைப்பாளர் திரு. இரா. சிவா அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
புதுச்சேரி மணவெளி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா இன்று 24.08.25 நடைபெற்றது. மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள மணவெளி தொகுதி கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக மணவெளி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு. வீ. சன். சண்முகம் தலைமையில் புதுச்சேரி மாநில கழக அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திருமிகு. இரா சிவா அவர்கள் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கு மாநில கழக அமைப்பாளர் திருமிகு. இரா. சிவா அவர்கள் கருப்பு-சிவப்பு துண்டினை அணிவித்தார். கழகத்தில் இணைந்த அனைவரையும் தொகுதி செயலாளர் ராஜாராமன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. வி அணிபால் கென்னடி, திரு. இரா செந்தில்குமார் திரு. எல். சம்பத் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பூ மூர்த்தி பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், கோபாலகிருஷ்ணன், அமுதா குமார், நர்கீஸ், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த, தொகுதி செயலாளர்கள் சக்திவேல், தியாகராஜன், மாநில விளையாட்டு அணி அமைப்பாளர் ரவி என்கிற ரவிச்சந்திரன், தொகுதி அவைத்தலைவர் முருகையன், பொருளாளர் செல்லப்பன், மாநில பிரதிநிதிகள் ராஜாமணி, விஜயகிருஷ்ணன், துணை செயலாளர்கள் ஆனந்தகுமார், ராஜவேலு, ஜெகதீஸ்வரி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ஆனந்த பாஸ்கரன், தயாளன், சாந்தபாலன், பாஸ்கர், மருது, மாநில ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல், நோணாங்குப்பம் காசி வீரப்பன், மீனவர் அணி துணை அமைப்பாளர் வீரபத்திரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் காசி வீரதமிழ்பிரியன், தொகுதி தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர்கள் விமல், செல்வம், தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சிலம்பரசன், துணை அமைப்பாளர்கள் பிரதீப், அம்பேத்கார், ரூபன், அஜய், வேல்முருகன், செழியன், புகழேந்தி, பவி, மாணவர் அணி அமைப்பாளர் ஞானவாசன், துணை அமைப்பாளர்கள் குருபிரசாத், கலையரசன், தர்ம பிரியா, பிரவின், பிரகாஷ், பிரசாத் கிளைக் கழக செயலாளர் ராஜேந்திரன் முருகன் பரசுராமன் இளங்கோவன் பலராமன் பூங்காவனம் முருகானந்தம் சந்திரன் பாலகிருஷ்ணன் ராமசாமி சக்திவேல் பாக்கியராஜ் நரசிங்கம் மற்றும் பலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
English Summary
DMK preparing for the assembly elections alliance with splinter party members