இந்துமத சாதிகளுக்கு பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துங்கள் - மத்திய அரசுக்கு திமுக வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


பொது சிவில் சட்டத்திற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தாக, மத்திய சட்ட ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், பொது சிவில் சட்டத்தை திமுக எதிர்ப்பதாக மத்திய சட்ட ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், பொது சிவில் சட்டம் மக்களின் ஒற்றுமையை சீர் குலைக்கும் வாய்ப்பு உள்ளதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் பொது சிவில் சட்டமே நிறைவேற்றக்கூடாது என்பது தான் திமுகவின் தீர்க்கமான கொள்கை பிரகடனம் என்றும் துரைமுருகன் தனது கடிதத்தில் விவரித்துள்ளார்.

'வேற்றுமையில் ஒற்றுமை' என உலக நாடுகளே வியந்து பாராட்டும் நாடு நம்முடைய இந்திய நாடு. பொது சிவில் சட்டத்திற்கு 22 ஆவது சட்ட ஆணையம் அனுமதி வழங்கக் கூடாது என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இந்து மத சாதிகளுக்கு இடையே பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றி, சாதிய ஏற்றத்தாழ்வை சமன் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்.

பொது சிவில் சட்டம் அமலின் மூலம் தனிமனித உரிமைகளை பருத்து ஏற்புடையது அல்ல. சிறுபான்மை மக்கள் மட்டுமின்றி, பட்டிலென, மலைவாழ் மக்களும் இந்த சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள்" என்று அந்த கடிதத்தில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK oppose to Uniform Civil Code


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->