மிக்ஜாம் புயல் நிவாரணத்திற்கு ரூ. 276 கோடி ஒதுக்கீடு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் வெள்ளநிவாரணம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் ரூ.38,000 கோடி கேட்கப்பட்ட நிலையில் மத்திய அரசு வெறும் ரூ.276 கோடியை மட்டுமே ஒதிக்கிவுள்ள நிலையில் , அதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் கூறிருப்பதாவது,

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழை வெள்ளத்தினால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்கிட வேண்டுமென ஒன்றிய அரசை வற்புறுத்தியது. ஒன்றிய பாஜக அரசு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காத நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.276 கோடி ரூபாய் மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் வஞ்சிக்கும் செயலாகும். இந்த ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கடுமையான பாதிப்புகளைச் சந்தித்த தமிழகத்திற்கு ரூ.276 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல ஒன்றிய அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையாகும். கூட்டாட்சி கோட்பாட்டிற்கும், மாநில உரிமைக்கும் எதிரானதாகும். தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வு மட்டுமின்றி வெள்ள நிவாரண நிதி ஒதுக்குவதிலும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை தொடர்வதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

எனவே, ஒன்றிய அரசு தனது அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையை  கைவிட்டு மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழை வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசுகோரியுள்ள ரூ.38 ஆயிரம் கோடியை உடடியாக தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டுமென சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Migjam storm relief Rs. 276 crore allocation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->