மத்திய குற்றப்பிரிவின் கிடுக்குபிடி விசாரணையில் சிக்கி தவிக்கும் திமுக MLA.! - Seithipunal
Seithipunal


மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன்பு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி ஆஜராகினார்.

போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சியில் இருந்தவர் செந்தில்பாலாஜி, அப்பொழுது அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் காவல்துறையினர், அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி மந்தைவெளி வீட்டிற்கு சீல் வைத்து இருந்தனர். இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கியது.  தேவைப்படும் பொழுது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதன்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி ராமசந்திரமூர்த்தி முன்பு இன்று செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராகி இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk mla senthil balaji case investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->