தி.மு.க எம்.எல்.ஏ கு.க செல்வம் மற்றும் பாஜக வி.பி.துரைசாமி கூட்டாக பரபரப்பு பேட்டி.. ஷாக்கில் தமிழக அரசியல்.!! - Seithipunal
Seithipunal


திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக அதிருப்தியிலிருந்த ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியானது. 

டெல்லி சென்ற அவர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். தன்னுடைய தொகுதி மேம்பாட்டுக்காக சந்திக்க வந்ததாக தெரிவித்த அவர், பாஜகவில் இணையவில்லை எனவும் கூறினார். 

அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அவர் பாஜகவில் இணைந்தால் அவருடைய பதவி பறி போகும் என்பதால் அவர் பாஜகவில் இணைய வில்லை என அறிவித்து இருந்ததாக கூறப்பட்டது. 

திராவிட முன்னேற்ற கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்து திமுக தலைமை இன்று அறிக்கை வெளியிட்டது.  இந்த சமயத்தில், சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ கு.க.செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " திராவிட முன்னேற்ற கழகத்தில் வாரிசு அரசியல் என்பது, குடும்ப அரசியலாக மாறி இருக்கிறது. மறைந்த அண்ணன் ஜெ.அன்பழகன் வகித்து வந்த பொறுப்பை நான் கேட்டேன் " என்று கூறினார்.

இதன்பின்னர் பேட்டியளித்த பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமி, " தி.மு.க கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வர வேண்டும் என்றும், திமுக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள செல்வம், பாரதிய ஜனதா கட்சியில் இணையவில்லை " என்றும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MLA KU KA Selvam and BJP VP Duraisamy Press meet


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->