ஆட்சி அமைந்ததும் கடலூர் மக்களுக்கு விடியல் - மு.க. ஸ்டாலின் பேச்சு.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் திமுகவின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய மு.க. ஸ்டாலின், " திமுக ஆட்சி அமைந்ததும் கடலூர் மாவட்டத்தில் வெள்ளசேதம் ஏற்படாதவாறு நிரந்தர தீர்வு காணப்படும். கடலூர் மாவட்டம் தருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, சேலம், விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு வடிகாலாக அமைந்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தின் வெள்ளப்பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட போது எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் என்னிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து தெரிவித்து இருந்தார். சாலைகள் அதிகளவு சேதமடைந்துள்ளது என்றும், சாலைகளுக்கு வழங்கப்பட்ட நிதிகள் செயல்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்து இருந்தார். என் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் கடலூர் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு கட்டாயம் கிடைக்கும். 

கடந்த 2014 ஆம் வருடம் கடலூர் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு என நிதிகள் ஒதுக்கப்பட்டு, எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஏரிகள் தூர்வாரப்படாததை பெய்த மழை தெளிவாக உணர்த்திவிட்டது. அதிமுக அரசின் அலட்சியம், ஊழல் பெருமளவு அதிகரித்துள்ளது. அதிமுக அரசின் கவனக்குறைவால் கடலூர் மாவட்டம் தண்ணீரிலும், கண்ணீரிலும் மிதக்கிறது.

தொழிற்துறை அமைச்சர் கடலூர் எம்.சி. சம்பத், கடலூர் மாவட்டத்திற்கு செய்தது என்ன?.. இரண்டு முறையும் கடலூர் தொகுதியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடலூர் மாவட்டத்திற்கு அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MK Stalin Speech Cuddalore Meeting 17 December 2020


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->