என் கனவுல வந்து சொன்னா... எங்களுக்கு ஓட்டு போடலை., திமுக ச.ம.உவின் திகில் ஷாக்.! அப்படியா விஷயம்.!! - Seithipunal
Seithipunal


உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்காத பட்சத்தில், பெண் சாமி கண்களை குத்திவிடும் என முற்போக்கு பேசும் திமுகவின் ச.ம.உ வேட்பாளர் வாக்கு சேகரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். நேற்று சீனிவாசபுரம், ஆம்பள்ளி உட்பட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். 

கிராமங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு, அங்கு வரும் பெண்களிடம் தான் சாமி கும்பிடும்போது, சாமி தனது கனவில் வந்து உதயசூரியனுக்கு ஓட்டு போடச்சொல்லி மக்களிடம் கூறுவதாக வாக்குறுதி அளித்ததாகவும், பெண் சாமியே இதனை கூறியதாகவும் தெரிவித்தார். 

மேலும், உதயசூரியனுக்கு வாக்களிக்காமல் பிற கட்சிகளுக்கு வாக்களித்தால், சாமி உங்களது கண்களை குத்தி விடும் என்றும் தெரிவித்தார். இதனைப்போல் மற்றொரு ஊரில் பேசுகையில், மாரியம்மன் கோவிலுக்கு மக்களை வரவழைத்து, மாரியம்மன் தன்னிடம் பேசியதாகவும், யாராவது உதயசூரியனுக்கு வாக்குகளை செலுத்தாமல் மாற்றி செலுத்தினால், அவர்களின் கண்ணை மாரியம்மாள் குத்திவிடும் என்றும் தெரிவித்துள்ளார். 

திமுகவினரின் போலி புரட்சி, போலி கடவுள் மறுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு என பல்வேறு விஷயங்கள் தேர்தலில் தவிடுபிடியாக்கபட்டுள்ள நிலையில், தேர்தல் முடிந்து ஒரு வேளை ஆட்சிக்கு வந்தால் மாரியாத்தாவா? அவள் யார்? என்று இழிவாக பேசவும் தயங்கமாட்டார்கள் என்றும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Krishnagiri Bargur MLA Candidate Speech 30 March 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->