உள்ளூர் நிர்வாகிகள் பெருமை பேச ஒரு கூட்டமா?. அப்ப முதல்வர் சொன்னது உண்மைதானா?.. திமுகவின் டேமேஜ்.! - Seithipunal
Seithipunal


பொது மக்களின் பிரச்சினையை கண்டறிந்து, அவர்களுடைய பிரச்சினையை மனுக்களாக சேகரிக்க கோரி திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது. முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும், இதே பாணியில் எடுக்கப்பட்டு நடவடிக்கையில், திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் மக்களிடம் சென்று நேரடியாக பிரச்சனைகளை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, 75 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் சென்று பொதுமக்களை சந்தித்து மக்களின் குறைகளை கேட்டு, அதனை மனுக்களாக சேகரித்து வர கூறி திமுக மூத்த நிர்வாகிகள் முடுக்கி விடப்பட்டனர். கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திமுகவின் மூத்த நிர்வாகிகள் கனிமொழி, தயாநிதி, உதயநிதி ஸ்டாலின் உட்பட பலரும் இந்த பயணத்தை துவங்கினர். 

நேற்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் திமுகவின் மகளிர் அணி செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக சிவகங்கை மாவட்ட செயலாளர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன் உட்பட பல திமுகவினர் கலந்து கொண்ட நிலையில், கனிமொழியிடம் கோரிக்கை வைக்க 11 பேர் முன்னதாகவே தேர்வு செய்யப்பட்டனர். 

இதில், கலந்துகொண்ட 8 பேரும் சொல்லிக்கொடுத்தார் போல திமுக பற்றியும், கனிமொழி மற்றும் உள்ளூர் தொகுதி திமுகவினர் குறித்தும் ஆகா ஓஹோவென பேசிய நிலையில், மூன்று பெண்கள் மட்டும் தங்களின் பிரச்சனைகளை கூறினார்கள். ஒரு பெண்மணி குடிநீர் மற்றும் பட்டா வழங்குதல் தொடர்பாகவும், மற்றொரு பெண் கல்வி கடன் மற்றும் மாணவ - மாணவியர்களுக்கான பேருந்து பயண அட்டை தொடர்பாகவும் பேசினர். 

இதனையடுத்து கனிமொழி பேசுகையில், " ஸ்டாலின் முதல்வரானதும் கல்வி கடன் ரத்து செய்யப்படும். நான் விவசாயி என்று கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்கிறார் " என்று தெரிவித்தார். மேலும், கிராம சபை கூட்டம் என்ற பெயரில், திமுகவினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு வைத்து கூட மக்களின் பிரச்னையை பேச விடாமல் உள்ளூர் நிர்வாகிகளின் பெருமையை பேச வைப்பது எப்படிப்பட்டது? என்ற கேள்வியையும் சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.  

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நாடாளுமன்ற தேர்தலின் போது நடத்தப்பட்ட திமுக கிராமசபை கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் இன்று வரை எனக்கு கிடைக்கப் பெறவில்லை என்றும், மக்களுக்கு அதிமுக ஒன்றுமே செய்யவில்லை என்று கூறும் மு.க ஸ்டாலின் மக்களின் மனுக்களை இன்று வரை கொண்டு வந்து சேர்க்காதது ஏன்? என்றும் கேள்வியை எழுப்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Kirama Saba Function CM Edappadi Palanisamy Statement 25 Jan 2021


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->