'கேழ்வரகு மாவு பக்கோடா' ஒருமுறை ட்ரை பண்ணுங்க.!  - Seithipunal
Seithipunal



சத்தான கேழ்வரகு மாவு பக்கோடா எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
கேழ்வரகு மாவு 
கடலை மாவு 
பச்சரிசி மாவு 
சோடா உப்பு 
வெங்காயம் 
இஞ்சி, பச்சை மிளகாய் 
கொத்தமல்லி, கருவேப்பிலை 
எண்ணெய், உப்பு 

செய்முறை: 
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சரிசி, கடலை மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும். 

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை உருட்டி சூடான எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியம் நிறைந்த கேழ்வரகு மாவு பக்கோடா தயார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ragi Pakoda In Tamil


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->