விஜயை ஒரு ஆளாக கூட மதிக்காத ஸ்டாலின், உதயநிதி.. அங்கிள் விமர்சனத்தை கண்டுகொள்ளாத திமுக..!
DMK ignores criticism from Stalin Udhayanidhi who doesnot even respect Vijay as a person
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் நடிகர் விஜய், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, “ஸ்டாலின் அங்கிள் – வெரி ராங் அங்கிள்” எனக் கூறி கலாய்த்துப் பேசியது, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
விஜய் தனது உரையில்,தங்கள் கட்சியின் ஒரே கொள்கை ரீதியான எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் தெளிவுபடுத்தினார்.தங்கள் கட்சி “டீலிங் போட்டு கூட்டணி அமைப்பதில்லை” என்றும், “உலக மகா ஊழல் கட்சியோ, பாசிச கட்சியோ அல்ல” என்றும் வலியுறுத்தினார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெகவும் திமுகவும் மட்டுமே முக்கிய போட்டியாளர்கள் என்றும், “திமுக கூட்டணி அமைத்து தப்பிக்க நினைக்கிறது” என சாடினார்.திமுக மற்றும் பாஜகவுக்கு இடையே ரகசிய கூட்டணி உள்ளது என்றும், ரெய்டு வந்தவுடன் திமுக தலைவர்கள் டெல்லிக்குச் சென்று மறைமுக சந்திப்புகள் நடத்துகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், எம்ஜிஆர் இருக்கும் வரை யாராலும் முதல்வராக ஆக முடியவில்லை என்பதை நினைவுகூர்ந்து, ஸ்டாலினையும் அதேபோல சவாலுக்கு உட்படுத்தினார்.
விஜயின் இந்த கடுமையான விமர்சனத்திற்குப் பிறகும், முதல்வர் ஸ்டாலினோ, அவரது மகன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இருவரும் தங்கள் அரசியல் மற்றும் நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
திமுகவின் அரசியல் பாணியின்படி, தங்களை விடச் சிறியவர்களின் விமர்சனங்களுக்கு பொதுவாக பதிலளிப்பது வழக்கமல்ல. சீமான் பலமுறை ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தபோதும், அவர் பெயரை ஸ்டாலின் உச்சரித்ததே இல்லை. சீமான் தந்தை இறந்தபோது மட்டுமே, அனுதாபம் தெரிவிக்கும் வகையில் முதல்முறையாக அவர் பெயரை குறிப்பிட்டார்.
அதே போன்று, விஜயின் பெயரையும் ஸ்டாலின் முற்றிலும் தவிர்த்து வருகின்றார். மதுரையில் நடந்த மாநாட்டில் அவர் கடுமையாகக் கேலி செய்தபோதிலும், ஸ்டாலின் அதை முற்றிலும் புறக்கணித்துள்ளார்.
அரசியல் வட்டாரங்களில், விஜயின் பேச்சு “எப்படியாவது ஸ்டாலினை பேச வைக்க வேண்டும் அல்லது விமர்சிக்க வைக்க வேண்டும்” என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு அமைந்ததாகவே கருதப்படுகிறது. “அங்கிள்” என்று அடிக்கடி குறிப்பிடுவதன் மூலம் ஸ்டாலின் கோபப்பட்டு பதிலளிப்பார், அப்படியே தன்னை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தவராக உயர்த்திக் காட்ட முடியும் என்ற கணக்கோடு விஜய் பேசியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், திமுக மேலிடம், “விஜயின் பேச்சுக்கு பதில் தரவேண்டாம்” என கட்சி தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், விஜயின் விமர்சனங்களை புறக்கணிக்கும் மூலோபாயத்தை திமுக தொடர்ந்து வருவதாகத் தெரிகிறது.
English Summary
DMK ignores criticism from Stalin Udhayanidhi who doesnot even respect Vijay as a person