திமுக முக்கிய புள்ளி வீட்டில் ஐ.டி ரெய்டு.. அதிர்ச்சியில் கழக உடன்பிறப்புகள்.!
DMK Coimbatore Paiya Gounder Home IT Raid
தமிழகத்தில் உள்ள 22 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டரின் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவருக்கு சொந்தமாக உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
ஈரோட்டில் உள்ள கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை செய்து வரும் நிலையில், இந்த சோதனையில் மொத்தமாக 100 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வருமான வரிஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில், சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 22 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தற்போது சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில், இந்த சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பையா கவுண்டரில் இல்லத்தில் நடைபெறும் சோதனை தொடர்பாக தகவல் அறிந்த அவரின் ஆதரவாளர்கள், இல்லத்திற்கு முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
DMK Coimbatore Paiya Gounder Home IT Raid