உச்சி குளிர பாராட்டு மழை! திமுகவினருக்கே டஃப் கொடுத்த திருமாவளவன்!
dmk coimbatore meeting Thirumavalavan
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, மக்களவை தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 40க்கு 40 வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மு க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை தொடங்கியுள்ளது.
இந்த விழாவில் கலந்துகொண்ட திமுகவின் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் இந்த விழாவில் உரையாற்றினர். அந்த வகையில் இந்த விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர், உறியில் இருக்கும் கருவாட்டை எடுக்கக் காத்திருக்கும் பூனைபோல, தமிழ்நாட்டில் 1 கருவாட்டையாவது எடுத்துவிடலாம் என பாஜக பார்த்தது ஆனால் அது நடக்கவில்லை. அதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், "தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டிருந்தால் இந்தியா கூட்டணிதான் ஆட்சிக்கு வந்திருக்கும். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனம் பாதுகாக்கப்பட்டிருக்கிற மாபெரும் வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றுள்ளது.
முரண்பாடுகள் இருந்தாலும் அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடியவராக உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்" என்றார்.
முன்னதாக விசிக தலைவர் திருமாவளவன், திமுகவினரை விட ஒரு படி மேலே சென்று முதல்வர் ஸ்டாலினை பாராட்டி தள்ளினார்.
"இந்தியா கூட்டணி தலைவர்களே, முதல்வர் ஸ்டாலினை வியந்து பார்க்கின்றனர். சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலினின் வியூகம்தான்" என்று திமுகவினர் வியக்கும் படி பாராட்டி பேசினார்.
English Summary
dmk coimbatore meeting Thirumavalavan