#Breaking: தேமுதிக - அதிமுக பேச்சுவார்த்தையில் இழுபறி?.. தேமுதிக மாநில துணைச்செயலாளர் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


கூட்டணியில் பேச்சுவார்த்தை நடக்கும் போது இழுபறி உள்ளது இயல்பானது. இரண்டு நாட்களில் நல்ல முடிவு வெளியாகும் என தேமுதிக மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், பாஜக மற்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேமுதிக மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி, தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " தேமுதிக தேர்தல் குழு வேட்பாளர்களை அறிவிக்கும். விஜயகாந்த் தெரிவித்த தொகுதியில் குறித்த இரண்டுகட்ட பேச்சுவார்த்தை அதிமுகவுடன் நடைபெற்றது. 

எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அதிமுக வந்துவிட்டது. சுமூக உடன்பாடு ஏற்பட்டவுடன் அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும். அதிமுக சார்பில் அவர்கள் போட்டியிடும் தொகுதியை வெளியிட்டியுள்ளார்கள்.

எண்ணிக்கை வெளியானதும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சியினருடன் இறுதி ஆலோசனை முடிந்ததும், தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். 

ஜெயலலிதாவிடம் கேட்டது போலவே 41 தொகுதிகள் கேட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டமாக 25 தொகுதி பேசப்பட்டு, மேலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூட்டணியில் பேச்சுவார்த்தை நடக்கும் போது இழுபறி உள்ளது இயல்பானது. இரண்டு நாட்களில் நல்ல முடிவு வெளியாகும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDK Sub Secretary of State Pressmeet Chennai DMDK Koyambedu Office 5 March 2021


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->