கூட்டணி குறித்து விஜய்யிடம் கேளுங்கள் - பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி..! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தச்சூரில் தேமுதிக பிரமுகர் கண்ணதாசன் இல்ல திருமண விழாவில் கலந்துக்ண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தவெக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், ”அதிமுகவுடன் தவெக கூட்டணி குறித்து விஜய்யிடம் கேளுங்கள். அதிமுக தலைமையில் நல்லதொரு கூட்டணி அமையும். உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தேமுதிமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும். தமிழ்நாட்டிற்கு தமிழ் தான் முக்கியம். இங்கு வேறு எந்த மொழியையும் திணிக்க முடியாது. 

ஒருவர் விரும்பினால் மட்டுமே அந்த மொழியை கற்க முடியும். ’நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது போல் பேசத் தெரியாமல் பேசி நடிகை கஸ்தூரி மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். பெண்களை தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது. ஆனால், எத்தனையோ தலைவர்கள் மோசமாக பேசியுள்ளனர். 

அவர்களையெல்லாம் ஏன் கைது செய்யவில்லை..? தீவிரவாதியை போன்று ஹைதராபாத்திற்கு சென்று கஸ்தூரியை போலீசார் கைது செய்திருக்கின்றனர். ஒரு பெண்ணான அவருக்கு இது போன்று நடந்துள்ளது அநியாயம்” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dmdk public secretary premalatha vijayakant speech about tvk alliance


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->