முதல்வர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு.!!
dmdk public secretary premalatha vijayakant meet cm mk stalin
தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சுமார் ஒரு வார காலம் தங்கி சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்தபடியே அரசு அலுவல்களையும் கவனித்து வந்தார்.
உடல் நலம் தேறிய நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் வந்துள்ளார்.
இந்த நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், தேமுதிகவின் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். யாருடன் கூட்டணி என்று தேமுதிக முடிவு செய்யாத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
English Summary
dmdk public secretary premalatha vijayakant meet cm mk stalin