மிகசிறந்த நண்பரை இழந்தேன்! ஈடு செய்ய முடியாத இழப்பு என விஜயகாந்த் குமுறல்!  - Seithipunal
Seithipunal


பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் லட்சுமி மூவி மேக்கர்ஸ். இந்த நிறுவனத்தை 3 பேர் இணைந்து நடத்தி வந்தனர். மூவரில் ஒருவரான சுவாமிநாதன் இன்று மரணமடைந்தார். 

உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன், பகவதி, உன்னை நினைத்து, அன்பே சிவம், உன்னைத்தேடி என பல வெற்றிப்படங்களை லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். வி.சுவாமிநாதன் தயாரிப்பாளர் மட்டும் இல்லாமல் ஒரு சில படங்களிலும் நடத்திருக்கிறார். 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதியானதால், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் சுவாமிநாதன். 
 
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று  சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இவரது மரணம் தமிழ் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவருடைய மறைவிற்கு, நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கல் பதிவானது, "பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், எனது மிகச்சிறந்த நண்பருமான சாமிநாதன் அவர்கள் கொரோனா தொற்றால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் மூலம் தர்ம சக்கரம், வீரம் வெளஞ்ச மண்ணு போன்ற பல திரைப்படங்களில் அவருடன் பணியாற்றிய நாட்கள் ஒரு பொற்காலம் என்று சொன்னால் அது மிகையாகாது.

மிகச்சிறந்த திறமைசாலியும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாமிநாதன் மறைவு திரைத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK leader mourning to lakshmi movie makers swaminathan


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal