தீபாவளி ரெயில்கள் முன்பதிவு...! சிறப்பு ரெயில்கள் போதாமை அதிர்ச்சி...!
Diwali train bookings Shocking shortage special trains
தீபாவளி பண்டிகைக்காக ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்படுகின்றனர். இதில் வழக்கமான ரெயில்களில் டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்வதால், காத்திருப்பு பட்டியலில் நூற்றுக்கணக்கானோர் சிக்குகின்றனர்.
இதனை சமாளிக்க கடந்த ஆண்டு 30-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் போதிய வசதி இல்லை என பயணிகள் குற்றம் சாட்டினர்.இந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து இந்திய ரெயில்வே நாடு முழுவதும் 12,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கத் திட்டமிட்டுள்ளது.

ஆனால் தெற்கு ரெயில்வே சார்பில் வெறும் 11 சிறப்பு ரெயில்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.மேலும், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு போன்ற நிலையங்களில் இருந்து கோவை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களுக்கு இந்த ரெயில்கள் இயக்கப்படும்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில்," போதிய ரெயில் பெட்டிகள் இல்லாததால், அதிகபட்சமாக உள்ள ரெயில்களுக்கே கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், 2 கூடுதல் பயணிகள் ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூடுதலாக எத்தனை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என்றும் தெரிவித்தனர்.
English Summary
Diwali train bookings Shocking shortage special trains