தீபாவளிக்கு லீவு எத்தனை நாள்?! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!  - Seithipunal
Seithipunal


தமிழக பள்ளிக்கல்வித்துறை தீபாவளிக்கு விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வருடம் தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடபடுகிறது. 

தீபாவளிக்கு முந்தின நாள், அடுத்த நாள் பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகாமல் இருந்தது. தீபாவளிக்கு முதல்நாள் அடுத்த நாள் விடுமுறை இல்லாததால் நீண்ட தூரம் சென்று தீபாவளி கொண்டாட வேண்டியவர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் பணிபுரிபவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி கொண்டாடுவதில் சிக்கல் இருந்தது. 

இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறையினால் வெளியிடபட்டுள்ளது.  அதில் அக்டோபர் மாதம் ௨7ஆம் தேதி தீபாவளி அன்றும், முந்தின நாள் 26 ஆம் தேதி சனி என்றும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அக்டோபர் 28ஆம் தேதி திங்கள்கிழமை, தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் எனவும், அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதாவது 26,27, 28 ஆகிய 3 நாட்களும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், 28ம் தேதி உள்ளூர் விடுமுறையாக தேவைப்படும் பள்ளிகள் மட்டும் எடுத்து கொண்டால் போதும் எனவும், 28ஆம் தேதிக்கு பதிலாக அதற்குப் பிறகு வரும் ஏதேனும் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலைநாள் அறிவித்துக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த வருடம் தீபாவளிக்கு மூன்று நாள் விடுமுறை உறுதியாகிறது. நீண்ட தூரம் சென்று சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட விரும்புவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali festival school holiday in tamilnadu


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal