சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பங்கேற்பு...! - மாமல்லபுரத்தில் அரசியல் கவனம்...!
Vijay participates Equality Christmas function Political attention Mamallapuram
தமிழக அரசியல் கட்சிகள் தனித்தனியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், அந்த வரிசையில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் இன்று சமத்துவ கிறிஸ்துமஸ் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ‘ஃபோர் பாயிண்ட்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த விழாவில், த.வெ.க. தலைவர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த விழா மேடையில் விஜய், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, கிறிஸ்துமஸ் பண்டிகையின் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற அடிப்படை மதிப்புகளை வலியுறுத்தினார்.
மேலும், விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களை பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். விஜய் பங்கேற்ற இந்த விழா, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
English Summary
Vijay participates Equality Christmas function Political attention Mamallapuram