மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி : புன்னகாயல் அணி கோப்பையை வென்றது!
District level football tournamentPunnagaiyal team won the trophy
புன்னகாயலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் செயின்ட் ஜோசப் பள்ளி அணி கோப்பையை வென்றது.
தூத்துக்குடி புன்னகாயலில் ரொங்கால்லி சில்வா நினைவு சுழற்கோப்பைகாண 6வது மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 10க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியில் இறுதி ஆட்டத்தில் புன்னக்காயல் செயின்ட் ஜோசப் பள்ளி அணியும் காயல்பட்டினம் எல்.கே. பள்ளி அணியும் மோதினர். இதில் செயின்ட் ஜோசப் பள்ளி அணியினர் 1-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றனர்
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு சேர்ந்தபூமங்கலம் புனித மீக்கல் ஆலய பங்குதந்தை ராயப்பன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி தொழிலதிபர் மெரின்டோ வி .ராயன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார். விழாவில் துறைமுக கமிட்டி தலைவர் ஜோசப் பர்ணாந்து, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெபஸ்டின் ராஜா, புன்னக்காயல் ஊர் கமிட்டி தலைவர் குழந்தைசாமி மச்சாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
District level football tournamentPunnagaiyal team won the trophy