புதுசா EV பைக் வாங்க போறீங்களா? புதிய 3 மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தும் கைனடிக் கிரீன்!
Are you planning to buy a new EV bike Kinetic Green introduces 3 new electric scooters
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான கைனடிக் கிரீன், தனது மின்சார வாகன வரிசையை விரிவுபடுத்தும் நோக்கில் மூன்று புதிய ‘பார்ன் எலக்ட்ரிக்’ ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது வரவிருக்கும் பண்டிகை கால சந்தையை இலக்காகக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு அறிமுகமாகி, வெற்றிகரமாக 80,000க்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்பனையான E-Luna ஸ்கூட்டரின் தாக்கத்தையே தொடரும் வகையில், இந்த புதிய மாடல்களும் இந்தியர்களுக்கான ஸ்டைலான, தொழில்நுட்பத்தில் முன்னேற்றமுள்ள, குடும்பத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முதல் மாடலின் அம்சங்கள்:
-
ரெட்ரோ ஸ்டைல் மற்றும் நவீன வசதிகள் கலந்த வடிவமைப்பு
-
TFT டிஸ்ப்ளே, IoT ஒருங்கிணைப்பு, Geo Things தள இணைப்பு
-
வேகமான சார்ஜிங் திறன் மற்றும் பல பேட்டரி விருப்பங்கள்
-
ஸ்மார்ட் இணைப்பு வசதிகள்
இத்தாலிய டிசைனுடன் ஒத்துழைப்பு:
இந்த புதிய மாடல்கள், இத்தாலியின் பிரபல டொரினோ டிசைன் நிறுவனத்துடன் கைனடிக் கிரீன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை "Born Electric" என்ற ஸ்டைலிங் தத்துவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கைனடிக் கிரீனின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் சுலஜ்ஜா ஃபிரோடியா மோட்வானி, “EV துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம், R&D திறமை, வேகமான சார்ஜிங் மற்றும் பேட்டரி பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இப்போது உலகத் தரத்தில் உருவாக்கப்படும் வடிவமைப்புகளுடன், புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என தெரிவித்துள்ளார்.
முன்னேற்ற பாதையில் கைனடிக் கிரீன்:
-
2022-ல் E2W துறையில் நுழைந்த கைனடிக் கிரீன்,
-
2024-ல் அறிமுகமான E-Luna நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு சூழல்களிலும் வரவேற்பு பெற்றது.
-
தற்போது, நாடு முழுவதும் 400 டீலர்களுடன், வலுவான உற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.
2024-25 நிதியாண்டில், இந்தியாவில் 1.15 மில்லியனுக்கும் மேற்பட்ட மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மின்சார ஸ்கூட்டர்களின் ஊடுருவல் 15% இலிருந்து 70% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 2030-க்குள் ரூ.40,000 கோடி அளவிலான சந்தையை அடைய, கைனடிக் கிரீன் சிறந்த நிலையில் உள்ளது.
தொடரும் புதுமை – எதிர்கால நோக்குடன்:
மின்சார இயக்கம் இந்தியாவில் வேரூன்றும் இந்தப் போது, கைனடிக் கிரீன் தனது "Thoughtful Engineering" தத்துவத்துடன், புதிய தலைமுறை ஸ்கூட்டர்களை வடிவமைத்து, ஒரு திறமையான, ஸ்டைலான மற்றும் டிஜிட்டல் அனுபவம் கொண்ட வரிசையை மக்கள் முன் கொண்டுவர உள்ளது.
English Summary
Are you planning to buy a new EV bike Kinetic Green introduces 3 new electric scooters