மழை ஆரம்பிச்சாலே எனக்கு போன் பன்றாங்க - தஞ்சை ஆட்சியர் வருத்தம்.! - Seithipunal
Seithipunal


தற்போதைய தலைமுறை மாணவர்களிடம் மழை பெய்து விட்டாலே பள்ளிக்கு லீவ் விடுவாங்களா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அதற்காக அவர்கள் காலையிலேயே எழுந்து டிவி முன் உட்கார்ந்து கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுள்ளதா? என்று மாணவர்கள் ஆவலுடன் பார்ப்பதை காண முடிகிறது.

இந்த நிலையில், மழை தொடர்பான எச்சரிக்கை செய்திகள் டிவியில் வந்தாலே உடனடியாக மாணவர்களின் பெற்றோர்கள் எனக்கு போன் செய்து இன்றைக்கு பள்ளிக்கு லீவு உண்டா? என கேட்பதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், "மழை தொடர்பான செய்திகள் டிவியில் வந்தாலோ.. சிறிய தூறல் அளவிலான மழை பெய்தாலோ மாணவர்களின் பெற்றோர்கள் உடனடியாக எனக்கு போன் செய்து, இன்றைக்கு பள்ளிக்கு லீவு உண்டா? என்று கேட்கிறார்கள். மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் லீவு விட வேண்டும்?.. 

நான் கேரளா மாநிலத்தை சேர்ந்தவன். கேரளாவில் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதலே மழை தொடங்கிவிடும். அப்போது நான் மழையில் நனைந்தபடியே தான் பள்ளிக்கு செல்வேன். அந்த நேரத்தில் மழை பெய்கிறது என்று நினைத்து நான் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்திருந்தால் இன்று உங்கள் முன்பு ஒரு கலெக்டராக நின்றிருக்க முடியுமா. 

ஆகவே, தயவு கூர்ந்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்.. வாழ்க்கையில் கல்வி மட்டுமே மற்றவர்களால் திருட முடியாத சொத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

district collector deepak jaccab worry phone calls for holiday


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->