வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம்: திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை பாதிப்புகளை சந்திக்க அனைத்தும் தயார் நிலையில் உள்ளன; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பல்நோக்கு கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்பு ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.கவிதா தலைமையில் நடைபெற்றது.

அப்போது ஆட்சியர் கவிதா தெரிவித்ததாவது;

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்துறை அலுவலர்கள் அடங்கிய 42 மண்டல குழுக்களும் 22 துணை மண்டல குழுக்களும் ஆக மொத்தம் 64 மண்டல குழுக்கள் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாகவும், மாவட்டத்தில் மொத்தம் 133 பகுதிகள் வெள்ளத்தில் பாதிப்பு அடையக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கட்டங்கள், கல்லூரி, சமுதாய கூடம், தனியார் திருமண மண்டபங்கள் என மொத்தம் 682 தற்காலிக தங்குமிடங்கள் உள்ளதாகவும், பொன்னேரி வட்டம் வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி, திருபாலைவனம், ஆண்டார்மடம், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளிலும், கும்மிடிப்பூண்டி வட்டம் எளாவூர், மெதிபாளையம் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாவட்டத்தில் முதல்நிலை பொறுப்பாளர்கள் 4480 நபர்களும் ஆப்த மித்ரா தன்னார்வலர்கள் 463 நபர்களும், யுவ ஆப்த மித்ரா தன்னார்வலர்கள் 313 நபர்களும் எஸ்.டி.ஆர்.எஃப் பயிற்சி காவலர்கள் 50 நபர்களும், மரம் நடுதல் மற்றும் அகற்றுதல் பணிக்கான முதல்நிலை பொறுப்பாளர்கள் 146 நபர்களும், பாம்பு பிடிப்பவர்கள் 63 நபர்களும், நீச்சல் வீரர்கள் 69 நபர்களும், மரம் ஏறுபவர்கள் 71 நபர்களும் ஆகியோர் தயார் நிலையில் உள்ளனர்.

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மணல் மூட்டைகள் 64921, சவுக்கு கம்பங்கள் 5562, பொக்லைன்கள் 32, ஜேசிபி 93, மரம் அறுக்கும் கருவிகள் 123, கயிறுகள் 717, படகுகள் 36, மோட்டார் படகுகள் 97, நீர் இறைக்கும் மோட்டார்கள் 178, சூப்பர் சக்கர் 8, ஜெனரேடர்கள் 84, தண்ணீர் லாரிகள் 29, சின்டெக்ஸ் டேங்க் 69, குப்பை லாரிகள் 96, சிறிய வாகனங்கள் 5, பாகிங் இயந்திரங்கள் 165, ப்ளீச்சிங் பவுடர் (விஜிs) 129.075, தார்ப்பாய்கள் 174, டார்ச் லைட்டுகள் 916, மின் கம்பங்கள் 5877, மின் கம்பி கி.மீ 195, மின்மாற்றி 17 ஆகிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. என்று குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

District Collector announces that everything is ready to face the effects of monsoon in Thiruvallur district


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->