திருமண ஆசை காட்டி ஏமாற்றம்...கட்டாயக் கருக்கலைப்பு..! காவலர் காதலன் மீது இளம்பெண் பகீர் புகார்...! - பேரூர் காவலர்கள் அதிரடி!
Disappointed marriage proposal forced abortion Young woman files complaint against policeman boyfriend Perur police take action
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மகன் உதயகுமார் (30). இவர் பில்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.இந்த நிலையில், பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுடன் நெருங்கிப் பழகிய உதயகுமார், திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்து காதல் உறவை வளர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவரின் வார்த்தைகளை உண்மையென நம்பிய அந்த பெண், தொடர்ந்து அவருடன் தனிமையில் சந்தித்து பேசி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.நாட்கள் செல்லச் செல்ல இந்த பழக்கம் நெருக்கமான உறவாக மாறிய நிலையில், பலமுறை இருவரும் தனிமையில் இருந்ததாகவும், அதன் விளைவாக அந்த இளம்பெண் கர்ப்பமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல் தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த உதயகுமார், வடவள்ளி மற்றும் அவினாசி அருகே உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று, கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு அந்த பெண் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பது அந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், “என் வாழ்க்கையை ஏமாற்றி சீரழித்துவிட்டாய்” என்று கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.அதற்கு பதிலளித்த உதயகுமார், “இந்த விவகாரத்தை வெளியே தெரிவித்தால், நாம் இருவரும் தனிமையில் இருந்த காணொளிகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன்; உயிருடன் விடமாட்டேன்” என மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து மனவேதனையடைந்த அந்த இளம்பெண், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவலர்கள் உதயகுமாரை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், திருமண வாக்குறுதி அளித்து பெண்ணை ஏமாற்றியதும், கர்ப்பமாக்கி கட்டாய கருக்கலைப்பு செய்ததும், தொடர்ந்து மிரட்டல் விடுத்ததும் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து பேரூர் மகளிர் காவலர்கள் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Disappointed marriage proposal forced abortion Young woman files complaint against policeman boyfriend Perur police take action