பட்ட பட்டய திறனாய்வு பயிற்சி..மாணவர்களுக்கு அடுத்த நிலைக்கான சான்றிதழ் வழங்கல்!
Diploma skill assessment training Certificate awarded to students for the next level
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஆதித்யா சிலம்ப பாசறை சார்பாக நடத்த பட்ட பட்டய திறனாய்வு பயிற்சிக்கான சிலம்ப கலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்த நிலைக்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது..,
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில், ஆதித்யா சிலம்பப் பாசறை பயிற்சி நிலையம் சுமார், மூன்று தலை முறையாக மாணவ மாணவிகளுக்கு பயிர்ச்சி அளித்து வருகிறது. மேலும் இம்மையமானது, தற்போது கவுண்டம்பாளையம், கணுவாய், பெரியநாயக்கன்பாளையம், நல்லாம்பாளையம், வடவள்ளி, பொம்மனம்பாளையம், உள்ளிட்ட 9 பகுதிகளில், பயிற்சி மையங்கள் அமைத்து சிலம்ப பயிற்சிகளை சிறப்பான முறையில் மாணவ மாணவிகளுக்கு, அளித்து வருகிறது.
தற்போது முறைப்படுத்தப்பட்ட பாடத்திட்டங்களாக வகுக்கப்பட்டு சிலம்ப பாட பிரிவுகளில், காலடி நிலைகள், ஒற்றைக்கம்பு சுற்றும் முறைகள், நடுக்கம்பு சுற்றும் முறைகள், இரட்டைக் கம்பு சுற்றும் முறைகள், படை வீச்சு, படை சவுக்கம், படைவிரட்டல், ஒற்றைக்கம்பு போர் முறை, இரட்டைக் கம்பு போர் முறை, ஒற்றைவால், இரட்டைவால், பிச்சு வால்,ஒற்றை சுழல், இரட்டைச் சுருள், தீப்பந்தத்தில் அலங்கார பாட வகைகள், அடிமுறை, குத்துவரிசை, என அனைத்து பாட பிரிவிலும் தனி திறன் பாடப்பிரிவு, தொடு முறை சிலம்பம், தொன்மையான அடிமுறை குத்துவரிசை, வர்மம் தொடுதல், ஆகிய பயிற்சிகள் நிலை வாரியாக பிரிக்கப்பட்டு பாடங்களுக்கு பட்டய திறனாய்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்க பட்டு வருகிறது.
மேலும் அளிக்க படும் பயிற்சிகள் அவ்வபொழுது தேர்வுகள் வைத்து அதில் தேர்ச்சி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அத்தகைய பட்டய திறனாய்வு தேர்வுகள் நடத்த பட்டு, சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி, கடந்த மாதம் பொம்மனம்பாளையம் பகுதியிலும், கடந்த 5ம் தேதி, லட்சுமி நகர், மற்றும் கணுவாய் பயிற்சி மையத்திலும், கடந்த 12ம் தேதி, கவுண்டம்பாளையம் பகுதியில், உள்ள, சோழன் நகர் பயிற்சி மையத்திலும் நடைபெற்றது. குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பட்டய திறனாய்வு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது .
இதில் லட்சுமி நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளும், மாணவ மாணவியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கணுவாய் பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் எஸ்எம்பி. சேம்பர் உரிமையாளர் முருகேசன், கேஜிகே திருமண மண்டப உரிமையாளர் தனக்குமார், கேசிகே திருமண மண்டப உரிமையாளர் சம்பத், மற்றும் ஆதித்யா சிலம்பப் பாசறையின் முன்னாள் மாணவரும், பன்னீர் அண்ட் கோ கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளருமான பன்னீர் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் பதக்கங்களை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் .
தொடந்து கவுண்டம்பாளையத்தில் நல்லாம்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கும், மாணவியர்களுக்கும், கவுண்டம்பாளையம் பயிற்சி மையத்தில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ம், ஆதித்யா சிலம்பப் பாசறையின் நிறுவனரும் தலைமை ஆசானமாகிய முத்துப்பாண்டியன் சான்றிதழ்கள், மற்றும் பதக்கங்களை வழங்கி மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை காண போட்டியில் வெற்றி பெற்ற ஆதித்யா சிலம்ப பாசறையின் முதன்மை பயிற்சியாளரும் ஆதித்யா ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவருமான சரணுக்கும், ஆதித்யா சிலம்ப பாசறையின் பயிற்சியாளர் அரவிந்தனுகும், பள்ளிகளுக்கு இடையே நடந்த மண்டல அளவிலான போட்டிகளில் முதன்மை பெற்று மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட சிலம்ப பெண் பயிற்சியாளர் கோகிலா ஸ்ரீ ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Diploma skill assessment training Certificate awarded to students for the next level