கொடுத்த கடனை வாங்க வந்த ஊழியர்.! அடாவடியை வீட்டுக்குள் புகுந்து செய்த காரியத்தால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் காக்காயன் குளத்துப்பட்டி எனும் கிராமத்தில் கடன் வசூலுக்காக வந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்   வீட்டிற்குள் அடாவடியாய் புகுந்து கட்டிலில் படுத்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கள் மாவட்டத்தில் அய்யலூர் பகுதிக்கு அருகே உள்ள காக்காயன்குளத்துபட்டியில் கூலி வேலை செய்துவருகின்ற 37 வயது பெண், திருச்சி வையம்பட்டியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றுள்ளார். 

ஊரடங்கு காரணமாக வருமானம் குறைந்ததால், கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, கடனை வசூலிக்க வீட்டிற்கு வந்த ஊழியர் அப்பெண்ணின் வீட்டுற்குள் அடாவடியாய் புகுந்துள்ளார்.

பின், கட்டிலில் சென்று படுத்துகொண்டு பணம் வாங்காமல் கிளம்ப மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

கணவர் வெளியூருக்கு சென்ற நிலையில், அக்கம்பக்கத்தினர் வேடிக்கை பார்க்க அந்த பெண் மிகுந்த அவமானத்தால் பரிதவிக்க., இதனை சிலர் படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dindukkal women harassed by finance company staff


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->