கடனுக்கு டீ குடித்து, குடிகாரன் வீராப்பு பேச்சு... டீக்கடை உரிமையாளர், ஆத்திர தீக்கடையாக மாறியதால் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் தென்னம்பட்டி பகுதியில், தேநீர் கடை நடத்தி வருபவர் முரளி. இவரது கடையில் தினமும் வாடிக்கையாளராக இருந்து தேநீர் அருந்தி வருபவர் அம்மாசி. இவர் கடனுக்கு தேநீர் குடித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடன் தொகை ரூபாய் 150 பாக்கியை சம்பவத்தன்று முரளி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அம்மாசி, " கடனைக் கொடுத்து விடுவேன்.. ஓடிவிடவா போகிறேன் " என்று மதுபோதையில் பேசியுள்ளார். 

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தேநீர் கடை உரிமையாளர் முரளி, உருட்டு கட்டையை எடுத்து அம்மாசியின் தலையில் தாக்கிய நிலையில், அவரது மண்டை உடைந்து இரத்தம் வந்துள்ளது. 

இதனையடுத்து அம்மாசி ஆதரவாளர்கள் என்ற பெயரில், சிலரை முரளியின் கடைக்கு அழைத்து வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தின் போது, ஒரு சமயத்திற்கு மேல் அம்மாசியும் - முரளியும் கட்டி புரண்டு சாலையில் உருண்டுள்ளனர். 

இதனை கண்ட பொதுமக்கள், இவர்களை விலக்கிவிட்டு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து வடமதுரை காவல் துறையினர், இருதரப்பு புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Vedasandur Tea Shop Owner and Loan Tea Drinker Funny Fight Road


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->