திருமணம் முடிந்தும் கள்ளக்காதலை கைவிட முடியாத சோகம்.. அரங்கேறிய பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சிறுநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்தவர் ரதிதேவி. இவர் நிலக்கோட்டை ஒன்றியத்தில் தற்காலிக அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். ரதிதேவிக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கு போட்டோகிராபர் சுரேஷ் எனபவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். கடந்த நான்கு வருடமாக இருவரும் கள்ளக்காதல் உறவால் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சுரேஷுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த ரதிதேவி திருமணத்தை தடுத்து நிறுத்த முயற்சித்த நிலையில், யாரை திருமனம் செய்தாலும் உன்னுடன் கொண்ட உறவை கைவிடமாட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனால் ரதி தேவியும் அமைதியாக இருந்து வந்த நிலையில், கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த சுரேஷின் மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த சுரேஷ் ரதிதேவியை விட்டு பிரிய முடிவு செய்துள்ளார். ஆனால், ரதிதேவி இதனை ஏற்றுக்கொள்ள இயலாமல் தவித்துள்ளார்.

கள்ளக்காதலியை சமாதானம் செய்ய வைகை அணைக்கு சுரேஷ் அழைத்து சென்ற நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில், கீழே கிடந்த கல்லை எடுத்து ரதிதேவியின் தலையில் எரிந்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பெண்மணியை மீட்ட அக்கம் பக்கத்தினர், அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி ரதிதேவி பரிதாபமாக பலியாகியுள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்து ரதிதேவியை கொலை செய்த சுரேஷை தேடி வந்தனர். 

காவல்துறையினர் தேடுவதை அறிந்த சுரேஷ் குறும்பட்டி கண்மாயில் மதுவில் விஷம் கலந்துகுடித்து மயங்கி இருந்துள்ளார். இவரை மீட்ட காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதி செய்யவே, சுரேஷும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Illegal Affair Couple Murder and Suicide Police Investigation 20 Feb 2021


கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..Advertisement

கருத்துக் கணிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளது?..
Seithipunal