வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...! - தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளை (மார்ச் 22) முதல் மார்ச் 24-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகம் வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், மார்ச் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

மேலும், மார்ச் 25, 26 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்றும், மீண்டும் மார்ச் 27-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் சேர்த்து வெப்பநிலையும் அதிகரிக்கக்கூடும்; குறிப்பாக மார்ச் 23, 24 தேதிகளில் இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.

சென்னையில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 93°F ஆக இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் சுருளக்கோடு மற்றும் மாம்பழத்துறையாறு பகுதிகளில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lower level Atmospheric Circulation Chance Rain Tamil Nadu 3 Days


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->