ஐபோன் பயனர்களுக்கு ஜாக்பாட்...! - வாட்ஸ்அப் மெசேஜ்கள் இனி 21 மொழிகளில் தானாகவே மொழிபெயர்க்கப்படும்...!
Jackpot iPhone Users WhatsApp Messages Automatically Translated 21 Languages
ஐபோன் பயனர்களுக்காக வாட்ஸ்அப் நிறுவனம் புதிய 'ஆட்டோமேட்டிக் மெசேஜ் டிரான்ஸ்லேஷன்' (Automatic Message Translation) வசதியை உருவாக்கி வருகிறது. இந்த அம்சத்தின் மூலம், சாட்கள் மற்றும் குழுக்களில் வரும் செய்திகளைப் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் தானாகவே மொழிபெயர்த்துக்கொள்ள முடியும்.

முதற்கட்டமாக 21 மொழிகளில் இந்தச் சேவை வழங்கப்படவுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.இந்த அம்சம் ஆப்பிள் நிறுவனத்தின் API உதவியுடன் ஐபோனிலேயே நேரடியாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் செய்திகள் வெளிப்புற சர்வர்களுக்கு அனுப்பப்படாமல், 'எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்' பாதுகாப்புடன் மொழிபெயர்க்கப்படும். பயனர்கள் தங்களுக்குத் தேவையான மொழித் தொகுப்புகளைப் (Language Packs) பதிவிறக்கம் செய்து ஆஃப்லைனிலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தற்போது பயனர்கள் ஒரு செய்தியைத் தனியாகத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க வேண்டியுள்ள நிலையில், புதிய அப்டேட் மூலம் ஒட்டுமொத்த உரையாடலையும் தடையின்றிப் புரிந்துகொள்ள முடியும்.
அதேசமயம், அசல் செய்தியைப் பார்க்கவும், மொழிபெயர்ப்பை நீக்கவும் பயனர்களுக்கு முழு கட்டுப்பாடு வழங்கப்படும். இந்த அம்சம் தற்போது சோதனைக் கட்டத்தில் (Beta) உள்ளதால், விரைவில் அனைத்து ஐபோன் பயனர்களுக்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Jackpot iPhone Users WhatsApp Messages Automatically Translated 21 Languages