சிகிச்சைக்காக வந்த இடத்தில் நேர்ந்த விபரீதம்...! - கொச்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு....!
Tragedy Strikes While Seeking Treatment 5 Members Same Family Recovered Dead Kochi
கொச்சியில் உள்ள ஒரு வாடகை வீட்டில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சனிக்கிழமையன்று (மார்ச் 21) சடலங்களாக மீட்கப்பட்டனர். மேலும், உயிரிழந்தவர்களில் கனகலதா, அவரது மகள் அஸ்வதி மற்றும் அஸ்வதியின் 14, 10 மற்றும் 2 வயதுடைய மூன்று குழந்தைகள் அடங்குவர்.

இவர்கள் சிகிச்சைக்காக கடந்த சில மாதங்களாக கொச்சியின் வடூத்தலா பகுதியில் தங்கியிருந்தனர்.வெள்ளிக்கிழமை முதல் இந்த குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் சோதித்தபோது, ஐந்து பேரும் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.
இது ஒரு தற்கொலை அல்லது கொலை சம்பவமாக இருக்கலாம் என எர்ணாகுளம் வடக்கு காவல்துறை சந்தேகிக்கிறது. இதில் பெரியவர்கள் குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தாங்களும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மரண விசாரணை நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவின் பாகல்கோட் பகுதியில் தாய் ஒருவர் தன் மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் சுவடு மறையும் முன்பே, தற்போதைய இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
English Summary
Tragedy Strikes While Seeking Treatment 5 Members Same Family Recovered Dead Kochi