டிஜிட்டல் முறையில் பேருந்துகளில் பணப் பரிவர்த்தனை டிக்கெட் எடுக்கும் முறை...! நெல்லையில் அமலுக்கு வந்தது...!!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு போக்குவரத்து சேவையில் பயணிகளின் வசதிக்காக மின்னணு டிக்கெட் எந்திரங்கள், பண பரிவர்த்தனையை நவீனமயமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டன. இது சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முறையில் இந்த எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

அதன் வெற்றிக்கு பிறகு தற்போது மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் மின்னணு டிக்கெட் எந்திரங்கள் மூலம் பயணசீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் காலதாமதம் ஏற்படாத வகையில், இந்த எந்திரங்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இதில் ரொக்க பணம் இல்லாமல் பேருந்தில் ஏறும் பயணிகள் இந்த எந்திரங்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியும், ஜிபே, போன்பே போன்ற செயலிகள் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தி பயணசீட்டு  பெறலாம். இதையடுத்து நெல்லை அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து பஸ்களிலும் இந்த டிஜிட்டல் பணபரிவர்த்தனை பயணசீட்டு வழங்கும் பணி அமலுக்கு வந்துள்ளது.

இதை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில், பேருந்துகளின் முன்பக்க கண்ணாடியில் "இப்பேருந்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்" என்று ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள்:

இதுகுறித்து நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கையில், "மக்கள் டிஜிட்டல் பணபரிவர்த்தனையை தற்போது எளிதாக கையாண்டு வருகிறார்கள். எனவே அனைத்து அரசு பேருந்துகளிலும் பயணச்சீட்டுக்கு உரிய கட்டணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் இணையதள வசதி கிடைக்காமல் சர்வர் பிரச்சினை ஏற்பட்டால், வழக்கம் போல் பயணசீட்டு வழங்கப்படும். இதில் கண்டக்டர்கள் அதற்கு தேவையான பயணசீட்டுகளை தயார் நிலையில் வைத்திருப்பார்கள். இதை பயணியே முடிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் சில்லரை பிரச்சினை இனிமேல் ஏற்படாது" என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Digital payment system for bus tickets Implemented in Nellai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->