தர்மபுரி | 108 கிலோ மிளகாய் கரைசலில் குளியல் - வினோத வழிபாடு நடத்திய பூசாரி!
Dharmapuri periya karuppasamy priest worship people
தர்மபுரி, இண்டூர் அருகே ஆடி அமாவாசையை முன்னிட்டு பெரிய கருப்புசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த விழாவில் கும்பளபாடி குண்டத்து மாரியம்மன், செல்லி அம்மன், ஊர் மாரியம்மன் போன்ற சாமிகளுக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர். இதனை தொடர்ந்து பெரிய கருப்புசாமி கோவில் ஆடு, கோழிகள் என பலியிட்டு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றது.

பின்னர் மிளகாய் யாகம் நடத்தப்பட்டது. குதிரை வாகனத்தில் வந்த பூசாரி கத்தி மீது நின்று கொண்டு பக்தர்களுக்கு அருள் வாக்கு தெரிவித்து, பக்தர்கள் குடும்பங்களில் தீவினைகள் அகலவும், துன்பங்கள் திறவும் வெறும் உடலில் இடுப்பில் வேட்டியை கட்டிக்கொண்டு 108 கிலோ மிளகாய் கூட்டு கரைச்சலில் பூசாரி கோவிந்தன் குளித்து பக்தர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் கருப்பு சாமியிடம் வினோத வழிபாடு செய்தார்.
இந்த வழிபாடு கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியமாக கண்டுகளித்தனர். இந்த வழிபட்டு முறைக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிளகாய் கொண்டு வந்து கோவிலில் வழங்கி வேண்டுதல் நிறைவேற வேண்டுமென கருப்பு சாமியை வழிபாடு செய்தனர்.
English Summary
Dharmapuri periya karuppasamy priest worship people