48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது - டிஜிபி-யின் "ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை" அசத்தல்..!
dgp operation minnal vettai 1, 310 rowdy arrest
தமிழகத்தில் டிஜிபி-யின் "ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை" என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது, '221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாகவும், 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையிலும் இருந்தன. தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள பல ரவுடிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீதி உள்ள ரவுடிகளிடம் காவல் துறையினர் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது.
இதன் பிறகு எந்தவிதமான குற்ற செயல்களிலும் ஈடுபடமாட்டேன் என்று அவர்கள் காவல்துறையிடம் எழுதி கொடுக்க வேண்டும். இருப்பினும், அவர்கள் உறுதிமொழியை மீறும்போது, அவர்களை சிறையில் அடக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
மொத்தத்தில் 331 ரவுடிகள் சிறையில் அடக்கப்பட்டுள்ளனர். பிடிபட்டவர்களில் 979 ரவுடிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பெறப்பட்டது., அவர்கள் அந்த உறுதிமொழியை மீறினால் ஆறு மாதம் சிறையில் அடைக்கப்படுவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
English Summary
dgp operation minnal vettai 1, 310 rowdy arrest