விரதம் தொடங்கிய பக்தர்கள்..தசரா விழாவு ஏற்பாடுகள் தீவிரம்!
Devotees who have started fasting Preparations for the Dasara festival are in full swing
தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் தசரா விழாவுக்கு மாலையணிந்து பக்தர்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர்.
மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்த படியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு செல்வார்கள்.
இத்தகையை சிறப்புபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம்23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது. மொத்தம் 12 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
தொழில், வேலைவாய்ப்பு, திருமண தடங்கல் நிவர்த்தி, தீராத நோய்கள், போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீங்க வேண்டி வேடம் அணிபவர்கள் 10 நாட்கள் விரதம் இருப்பார்கள்.
சுவாமி வேடங்கள் அணிபவர்கள் 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். மிக முக்கியமான காளி வேடம் அணிபவர்கள், தீச்சட்டி எடுப்பவர்கள் 61, 41, 31, 21 நாட்கள் விரதம் இருக்க தொடங்குவார்கள்.
காளி வேடமணியும் ஏராளமான பக்தர்கள் நேற்று காலை முதல் கடலில் நீராடிவிட்டு, கடற்கரையில் விற்கும் துளசி மாலையை வாங்கிக்கொண்டு முத்தாரம்மன் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர். விரதம் இருப்பவர்கள் தினமும் காலை, இரவில் இளநீர், மதியம் மண் பானையில் சமைக்கப்பட்ட பச்சரிசி சோறு, தாளிக்காத பருப்பு கலந்த உணவு சாப்பிடுவார்கள்.திருவிழாவையொட்டி ஏராளமான ஊர்களில் தசரா குழுக்கள் சார்பில் காளி பிறை அமைக்கப்பட்டு வருகிறது.
English Summary
Devotees who have started fasting Preparations for the Dasara festival are in full swing