பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா ஆரம்பமானது!. லட்சக்கணக்கானோர் மதுரையை நோக்கி குவிகின்றனர்!.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா ஆரம்பமானது!. லட்சக்கணக்கானோர் மதுரையை நோக்கி குவிகின்றனர்!.
தேவர் செயந்தி என்று ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை வீரரும் அரசியல்வாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை இன்று நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் மற்றும் பல அரசியல் கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதையடுத்து, பசும்பொன் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மதுரை சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி மற்றும் 56-வது குருபூஜை விழா கொண்டாட்டம் நேற்று முதல் ஆரம்பமானது.
இந்த நிலையில் இன்று பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் கல்ந்துக் கொள்ள மதுரை சென்ற முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வர் ஆகியோர், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து பசும்பொன், கமுதி போன்ற முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கமுதியில் ஆள்ளில்லா உளவு விமானம் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பசும்பொன்னில் ஒவ்வரு வருடமும் பல லட்ச கணக்கானோர் அஞ்சலி செலுத்தவருவது வழக்கம். இதனால் பல இடங்களில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
English Summary
devar jeyanthi festival started