பெற்றோர்களே உஷார்.. வேகமாக பரவும் "டெங்கு காய்ச்சல்"! வெளியான முக்கிய அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருப்பூர் கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனை அணுக வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். 

மேற்கண்ட எட்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருவதாகவும் அதன் தொடர்ச்சியாக பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தி உள்ளது. 

டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு அணுக வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இதே போன்று மே மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து பலர் உயிரிழந்தவர்களின் குழந்தைகளும் சிறுவர்களும் அதிகம். குறிப்பாக சென்னையில் அதிகப்படியான குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dengue fever increased in 8 districts of Tamilnadu


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->