அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரன் ராமஜெயம் கொலை வழக்குவில் புதிய திருப்பம்: சென்னை உள்ளிட்ட சிறை கைதிகளை விசாரிக்க முடிவு..! - Seithipunal
Seithipunal


கடந்த 2012 மார்ச் 29-ஆம் தேதி தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ராமஜெயம் தனது வீட்டில் இருந்து அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கை சிபிஐ விசாரத்து வந்த நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

அதன்படி, ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது. பின்னர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்த அவர்மாற்றப்பட்டார். இதையடுத்து, திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் தஞ்சாவூர் எஸ்பி ராஜாராம் ஆகியோரை உயர்நீதிமன்றம் விசாரணை அதிகாரிகளாக நியமித்தது. அதன்படி தற்போது பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தலைமையில் 02 டிஎஸ்பிக்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் கடந்த 01-ந்தேதி நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு சென்று கொலை குற்றவாளி சுடலைமுத்து என்பவரிடம் 03 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், ராமஜெயத்தின் கொலை நடந்த சமயத்தில் தொழிற்பயிற்சிக்காக திருச்சி சிறைக்கு சுடலைமுத்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தன்னுடன் இருந்த மற்றொரு கைதியுடன், கொலை செய்யப்பட்ட ராமஜெயம் வழக்கு தொடர்பாக செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த செல்போனை அப்போது ஜெயிலராக இருந்தவர் பறிமுதல் செய்து உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, திருச்சி, மதுரை, கோவை, கடலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகளில் உள்ள முக்கிய கைதிகள் சிலரிடம் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Decision to interrogate prisoners including those from Chennai in connection with the Ramajayam murder case


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->