காங்கிரஸ் நகர தலைவரை வீழ்த்திய கொடிய நஞ்சு...! - கட்டுவிரியன் கடித்து உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம்...!
deadly poison that brought down Congress city leader Shocking incident death from snake bite
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை திருமாளிகை தெருவைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரத்தின் மகன் மரியதங்கராஜ் (52), கழுகுமலை- சங்கரன்கோவில் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே பழைய பேப்பர் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். மேலும், நகர காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

நேற்று மாலை சுமார் 5 மணியளவில், கடைக்குள் இருந்த மேஜையின் அடிப்பகுதியில் குவிந்திருந்த பொருட்களை சீரமைத்து கொண்டிருந்தபோது, பழைய சாக்கு மூட்டைகளுக்குள் பதுங்கியிருந்த கட்டுவிரியன் பாம்பு திடீரென வெளியே பாய்ந்து, மரியதங்கராஜின் கையை பலமாக கடித்தது.
விஷப்பாம்பு கடித்த வேதனையில் அவர் அலறியதும், அப்பகுதி மக்கள் விரைந்து சென்று அவரை மீட்டனர்.இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக கழுகுமலை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மரியதங்கராஜிற்கு செல்லத்தாய் (47) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். நகர காங்கிரஸ் தலைவராக இருந்தவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கழுகுமலை பகுதியில் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
deadly poison that brought down Congress city leader Shocking incident death from snake bite