மாஞ்சோலை : குடியிருப்புகளை காலி செய்ய தோட்ட தொழிலாளர்களுக்கு காலக்கெடு..!! - Seithipunal
Seithipunalதிருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருகே உள்ளது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த தேயிலை தோட்டத்தை 1919ம் ஆண்டு முதல் 2028ம் ஆண்டு வரை அப்பகுதியை ஆண்ட சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து பாம்பே பர்மா ட்ரேடிங் கம்பெனி என்ற நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. 

இந்நிலையில் இந்த குத்தகை காலம் முடிவடைய இன்னும் 4 ஆண்டுகளே மீதி உள்ளது. எனவே இந்த மாஞ்சோலை பகுதியை வனத்துறை காப்புக்காடாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து மாஞ்சோலை பகுதியில் பணிபுரியும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை அப்பகுதியில் இருந்து காலி செய்ய வைப்பதில் பிபிடிசி நிறுவனம் முனைப்பாக உள்ளது. 

இதையடுத்து தேயிலை தோட்ட பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து அப்புறப் படுத்துவதற்கான பணியில்  அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து 100 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வரும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். 

தேயிலை தொழிலை மட்டுமே கடந்த 100 ஆண்டுகளாக செய்து வரும் தங்களால் இங்கிருந்து வெளியே சென்று வேறு தொழில் செய்து பிழைக்க முடியாது என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிபிடிசி நிறுவனம் 45 நாட்களுக்குள் குடியிருப்புகளை காலி செய்து விட்டு தொழிலாளர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் ஒன்றை வழங்கி உள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DeadLine Established For Manjolai Tea Estate Plantaion Workers For Vacating the House


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->