படத்தில் உள்ள பையன் யார் என்று தெரிகிறதா..? மாபெரும் பிரபலத்தின் வாரிசு, இப்போது இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்..? - Seithipunal
Seithipunal


நடிகர் ரகுவரன்  கேரளாவில் பிறந்தவர். பி.ஏ. பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.

கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் வில்லன் வேடங்களில் வரவேற்கப்பட்டார்.

சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். கடைசியாக அவர் நடித்து வெளியான தமிழ்ப் படம் சில நேரங்களில். இது தவிர இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை தன்னுடைய திறமையான நடிப்பினால் சூப்பர் ஸ்டார் முதல் அமிதாப்பச்சன் வரை அனைவருக்கும் வில்லனாக நடித்து இந்திய திரையுலகையே ஒரு கலக்கு கலக்கியவர் ரகுவரன்.

ஈடு இணையில்லாத நடிப்பை கொடுத்த இவரது இடத்தை இன்று வரை எவராலும் நிரப்ப முடியவில்லை, இவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார்.

இவர் நடிகை ரோஹிணியை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார், இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார்.

தற்போது இவரது மகனும் கிடுகிடுவென வளர்ந்து ரகுவரனின் அளவிற்கு உயரமாகவும் அழகாகவும் தோற்றமளிக்கிறார். இவரது  புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

current situation of actor raguvaran's son


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->