"பத்து தோல்வி பழனிசாமி! நீ அதற்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட"...முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்!
Ten defeats Palaniswami You won come back to terms with all that CM Stalin harshly criticizes
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று, நிறைவு பெற்ற திட்டங்களைத் திறந்து வைத்தார் மற்றும் புதிய நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சிகளை விமர்சித்ததுடன், தனது ஆட்சியின் சாதனைகளையும் வலியுறுத்தினார்.
“பெட்ஷீட் போட்டு மனு வாங்கிய ஸ்டாலின் – அதற்கும் தீர்வு கொடுத்துவிட்டோம்!”
முதல்வர் உரையில் கூறியதாவது:“தேர்தலுக்கு முன் ஊருக்கு ஊராக பெட்ஷீட் போட்டு மனுக்கள் வாங்கினேன். அதை எக்செல் ஷீட்டாக மாற்றி, ஒர்க் ஷீட்டாக மாற்றி தீர்வு கண்டோம். குடும்பத்தோடு நான்கு வருடமாக இருந்தேன் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் என் குடும்பம் என்றால் தமிழ்நாட்டு மக்கள்தான். அவர்களோடு இருந்தேன், இருக்கிறேன், என்றும் இருப்பேன்.”
அதிமுக, பாஜக மீதான கடும் விமர்சனம்
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும் கருத்துகளையும் சுட்டிக்காட்டிய ஸ்டாலின்:“அதிமுக ஆட்சியில் பத்து வருடங்களில் நிர்வாகம் சீர்குலைந்தது. அதை திருத்தியதுதான் நமது ஆட்சி. மகளிர் உரிமைத் தொகை, குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வழங்குவது போன்ற திட்டங்களை சொன்னபடி செய்து காட்டியிருக்கிறோம். பாஜக கூட்டணியால் தோல்வி ஏற்பட்டது என்று அதிமுக சொல்கிறது. ஆனாலும் அதே பாஜக உடன் இப்போது கூட்டணி வைத்திருக்கின்றார்கள். அது என்ன குடும்ப பாசமா?”
“அமித்ஷா வீட்டு கதவை யார் தட்டினார்?”
மு.க. ஸ்டாலின் தன் உரையில் விளாசிய மற்றொரு முக்கியமான பகுதியாக:“அமித்ஷாவின் வீட்டுக்குத் தட்டினால் என்ன தப்பு? என்று கேட்கிறார். ஏன் தட்டினீர்கள்? உங்கள் குடும்பத்தை ரெய்டிலிருந்து காப்பாற்றதான். அதற்காக பா.ஜ.க.வுடன் சேர்ந்தீர்கள். இதை உங்கள் சொந்த கட்சியினரும் நம்பவில்லை. மக்களும் ஒருபோதும் நம்பமாட்டார்கள்.”
“அடுத்து திராவிட மாடல் 2.0 தான் அமையும்!”
மக்கள் தங்களுக்கு நம்பிக்கையுடன் வாக்களித்ததாக கூறிய முதல்வர், தன் ஆட்சியின் வளர்ச்சியை நினைவுகூர்ந்தார்:“தமிழ்நாடு வளர்ச்சியில் முதலிடம் பிடித்துள்ளது என்பதை பா.ஜ.க.வின் மத்திய அரசே ஒப்புக்கொள்கிறது. அடுத்த ஆட்சியும் திராவிட மாடல் ஆட்சிதான். இது இணையற்ற ஆட்சியாக இந்திய அளவில் முன்மாதிரியாக அமையும்.”
English Summary
Ten defeats Palaniswami You won come back to terms with all that CM Stalin harshly criticizes