சரக்குக்கு சைடிஸ் வேணும்.. மளிகை கடையில் ஆல் இல்லாததால் வேட்டியில் மறைத்து திருட்டு.! - Seithipunal
Seithipunal


மளிகை கடையில் சரக்கடிக்க சைடிஸை இளைஞர்கள் திருடிய நிலையில், அவர்களின் திருட்டு செயல் குறித்த வீடியோ, புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள குள்ளஞ்சாவடி பகுதியில், ஆனந்த மளிகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் தான் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த மக்கள், மளிகை பொருட்களை வாங்கி செல்வார்கள். நேற்று ஆயுத பூஜை தினத்தில் கடையை சுத்தம் செய்த கடையின் உரிமையாளர் தயாளன், வீட்டில் பூஜை செய்ய மாலை 6 மணிக்கு சென்றுள்ளார். கடையை சிறு நம்பிக்கையில் திறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். 

மீண்டும் கடைக்கு வந்து பார்க்கையில், சில பொருட்கள் குறைந்திருப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து, கடைக்கு அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்கையில், அருகேயுள்ள கிராமத்தை சார்ந்த 3 பேர், கடையில் உள்ள பொருட்களை இடுப்பில் சொருகி சென்றது தெரியவந்தது. 

கடைக்கு வெளியே நின்று கொண்டு சாக்லேட், தின்பண்டங்கள் மற்றும் குளிர்பானம் போன்றவற்றை மொத்தமாக எடுத்து செல்லும் வீடியோ காட்சிகள் இடம்பெறவே, இதனை வைத்து தயாளன் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

விசாரணையில், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது மணி, வீரமணி, தினேஷ் மற்றும் விஜயகுமார் என்பது உறுதியாகவே, அவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், மதுபானம் அருந்த கடையில் உள்ள தேவையான பொருட்களை இளைஞர்கள் திருடி சென்றிருக்கலாம் என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore Kullanchavadi Store Products Stolen by Local Youngster Video Footage Leaked


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal