திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் காஷ்மீரில் விபத்தில் உயிரிழப்பு! ஜி.கே.வாசன் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் மணிபாரதியின் மறைவுக்கு ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜி கே வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மணிபாரதியின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கிறது. 

திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரி பேட்டையைச் சேர்ந்த மணிபாரதி ராணுவத்தில் சி.ஆர்.பி.எப் வீரராக பணிபுரிந்து வந்தார். 

காஷ்மீரில் பணியாற்றி வந்த இவர், பாதுகாப்பு பணிக்காக ராணுவ வண்டியில் சென்ற போது, ராணுவ வண்டி எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த மணிபாரதி உள்ளிட்ட 11 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததால் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். 

இந்நிலையில் மணிபாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. 

வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் மணிபாரதியின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், ராணுவத்துக்கும் பேரிழப்பாகும். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CRPF soldiers died condolence for GKVasan


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->