தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சமீப காலமாக பருவநிலை மாற்றங்களால் புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி வருகின்றன. அதன் காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுவர்கள் முதியவர்கள் என இந்த புதிய வகை வைரஸ் காய்ச்சல் பாதித்து வருகிறது.

சாதாரண சளி இருமல் காய்ச்சலால் மாத்திரை மருந்து எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். ஆனால் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்படுவோர் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். 

இதனையடுத்து தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் இலவச மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் மட்டும் 200 இடங்களில் நடைபெறுகிறது. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் பேசிய அவர், தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு முன் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில், தற்போது கொரோன பாதிப்பு இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஓமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முகக்கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல் போன்றவற்றை கடைபிடித்தல் அவசியம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Covid cases increase in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->