நீதிமன்றம் அதிரடி உத்தரவு!...சென்னை தியேட்டர் கேண்டினில் கெட்டுப்போன காப்பி விற்பனை! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள தனியார் திரையரங்கு ஒன்றில், நெல்லை மாவட்டத்தை  சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர் கடந்த ஜின் மாதம்   திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது இடைவேளை நேரத்தில் திரையரங்கில் உள்ள கேண்டினில்  ரூ.160/- செலுத்தி பில்டர் காபி வாங்கி குடித்த போது, காபி கெட்டுப்போன நிலையில் இருந்ததால், அதனை மாற்றி தருமாறு கேட்டுள்ளார்.

ஆனால் கேண்டினில் காப்பியை மாற்றித் தர முடியாது என  மறுத்ததாக கூறப்படும் நிலையில், தகாத வார்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.  இதனால்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சிவசுப்பிரமணியன்,   நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையை விசாரித்த ஆணைய நீதிபதிகள், சிவசுப்பிரமணியனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் ரூ.7000  வழங்க வேண்டும் என்றும், வழக்கு செலவாக ரூ. 3000 என மொத்தம்  ரூ.10,000 ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். மேலும் இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்க தவறினால் 9% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Court orders action Sold spoiled coffee in Chennai theater canteen


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->