எதற்காக எனது செல்போனை பறித்தாய்? செல்போன் பறித்தவரிடம் துணிச்சலாக சண்டை! பதறியடித்து ஓடிய நபர்! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒருவரிடம் பட்டப் பகலில் செல்போனை வழிப்பறி செய்த நபர், தாக்கியதால் பதறியடித்து பயந்து ஓடிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள கீழவாசல் படிமா சந்து பகுதியில் நேற்று மாலை ஒருவர் தன்னுடைய செல்போனை பார்த்தபடியே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது அவருக்குப் பின்னால் இரண்டு நப்ரகள் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு இருந்தனர். 

பின்னர் அவர் செல்போன் பார்த்துக்கொண்டு நடக்கையில் அவருக்கு பின்னால் வந்து அந்த இரண்டு இளைஞர்கள், அவரிடம் இருந்து செல்போனை பறித்து பணத்தை எடு என மிரட்டியுள்ளார்.

ஆனால், அந்த நபர் பயப்படாமல் தைரியமாக, “எதற்காக எனது செல்போனை பறித்தாய்?” என அந்த இரண்டு  இளைஞரில்  ஒருவரின் டி-சர்ட்டை பிடித்து இழுத்து சத்தம் போட்டுள்ளார். இதனால் இந்த இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

இதில், செல்போன் பறித்த நபர் ஒருவரின் டி-சர்ட்டை பிடித்து சண்டை போட்ட நிலையில் , தான் அணிந்திருந்த டி-சர்ட்டை கழற்றிவிட்டு பதறியடித்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்துக்கு சம்பந்தப்பட்ட இரு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

தஞ்சையில் பட்டப்பகலில் 2 இளைஞர்கள் செல்போனை பறித்துச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Courageously fight the person who took away the cell phone The person who ran away


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->