#வீடியோ: தனியாக வந்த தம்பதியை அடித்து நொறுக்கிய கும்பல்.. பதறவைக்கும் வீடியோ காட்சி! - Seithipunal
Seithipunal


ரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணைக்கு பொதுப்பணித்துறை நுழைவு கட்டணம் என்று கூறி, அணையை காணவரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து, இரு சக்கர வாகனத்திற்கு ரூ.10 மற்றும் கார்களுக்கு ரூ.20 வசூல் செய்யப்படுகிறது. இந்த வசூல் சட்டத்திற்கு விரோதமாக, உள்ளூர் அடாவடி கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாக நடந்து வருகிறது. 

இந்நிலையில், சம்பவத்தன்று அங்குள்ள அரியப்பம்பாளையம் பகுதியை சார்ந்த தினேஷ் குமார். தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் கொடிவேரி அணையில் உள்ள அருவிக்கு சென்ற நிலையில், ரசீது இல்லாமல் வாகன நுழைவுக்கு கட்டணம் கேட்டுள்ளனர்.

இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தங்களை கொடிவேரி பஞ்சாயத்து தலைவரின் ஆதரவாளர்கள் என்று கூறி பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததை அடுத்து, கணவன் மனைவியை கும்பல் அடித்து உதைத்துள்ளது. 

அதிகாரம் உள்ள ஆணவத்தில் பணம் கேட்டு தகராறு செய்த செய்தியானது தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இவர்களால் பாதிக்கப்பட்ட தம்பதியும் ஊருக்கு சென்று நடந்ததை கூறவே, ஊர்மக்கள் மறுநாளே ஒன்றுகூடி அடாவடி கும்பலை கைது செய்ய கோரிக்கை வைத்தனர். 

இந்த விவகாரத்தை அறிந்த ஊர் தலையாளிகள், விஷயம் வெளியே வந்து பஞ்சாயத்து ஆகியுள்ளதால், வழக்கு... விசாரணை.... கைது... என்று நிலைமை மாறிவிடும் என்று கையெடுத்து காலில் விழுந்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couples attack by peoples


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->