ஆதரவற்றவர்கள், நலிவடைந்தவர்கள் முன்னிலையில் நடந்த திருமணம்..! - Seithipunal
Seithipunal


ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் நலிந்த கலைஞர் முன்னிலையில் நடைபெற்ற திருமணம அனைவரையும் கவர்ந்துள்ளது.

பொதுவாக திருமணம் என்றால் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் தான் பெரும்பாலும் நடைபெறும்.அவர்களை உபசரிப்போம். ஆனால்,  தருமபுரி மாவட்டம், தின்னப்பட்டியைச் சேர்ந்த ’மாவீரன் பிள்ளை’ பட இயக்குநர் ராஜா மற்றும் அனுசியாவிற்கு நடைபெற்ற திருமணத்தில் ஆதரவற்ற குழந்தைகளும், முதியவர்களும், பெரியவர்களும் காதுகேளாத குழந்தைகளும், மாற்றுத் திறனாளிகளும், நலிந்த கலைஞர்களும் அதிகளவில் கலந்துகொண்டனர். 

இந்த திருமணத்திற்காக அவர்களை தனி வாகனம் மூலம் அழைத்துவந்தனர். மேலும், புதுமண தம்பதிகள் இருவரும் அவர்க அனைவருக்கும் உணவு பரிமாறினர். அதை தொடர்ந்து அவர்களுக்கு புத்தாடை வழங்கினர். அனைவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இந்த திருமணம் குறித்து மணமகன் ராஜா தெரிவிக்கையில், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதவரற்ற முதியவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களிலேயே உணவு வழங்கப்படுகிறது. அதனால், அவர்களுக்கு வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். இதுபோல திருமண விழாக்களுக்கு அழைத்து உணவளிப்பதால் அவர்கள் மகிழ்வாக இருப்பார்கள் என் தெரிவித்தார்.

இந்த திருமணத்தில், திரைப்பட நடிகர் ராதாரவி, சந்தனக்கடத்தல் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி உள்ளிட்டோற் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Couple married among orphans in Pennagaram


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->